கோவை மாநகராட்சியில் குப்பையை திறந்தவெளியில் கொட்டினால் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காமல், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், திறந்தவெளியில் கொட்டினால், மாநகராட்சியில் இருந்து வீடு தேடி நோட்டீஸ் வரும். அதை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் நேற்று (பிப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை நகர் பகுதியில் தினமும், 1,250 டன் வரை குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை, இறைச்சி கழிவு, மருத்துவ கழிவு என அனைத்து கழிவுகளையும் ஒன்றாக கலந்து கொட்டுவதால், மேலாண்மை செய்ய முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவிக்கிறது.

இதற்கு தீர்வு காண களமிறங்கியுள்ள, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு 'ரூட் சார்ட்' வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அதன் வழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். இவ்வாகனத்துடன் கூடுதலாக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறதா என கண்காணிக்கிறார்.

அவ்வாகனம் செல்லும் வழித்தடத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்பட்டு இருந்தால், அங்குள்ள 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு, யார் யாரெல்லாம் கொட்டுகிறார்கள் என கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. பின், அதை நகலெடுத்து, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

அதில், 'உங்களது வீதிக்கு இத்தனை மணிக்கு மாநகராட்சி வாகனம் குப்பை சேகரிக்க வந்தது. நீங்கள் குப்பையை தரம் பிரித்து கொடுக்கவில்லை. மாறாக, இத்தனை மணிக்கு திறந்தவெளியில் குப்பையை கொட்டியிருக்கிறீர்கள். இது தவறு. மேலும் வரும் நாட்களில், தரம் பிரித்துக் கொடுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையெனில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இப்பணிகள், ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இதற்காக, 25 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலாண்மைக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினருக்கு மைக் வழங்கப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பகுதியில் குப்பை தேங்கியிருக்கும் தகவல் கிடைத்தால், மைக்கில் கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறார்.

கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியால், தரம் பிரித்து சேகரிக்கும் குப்பை அளவு, 120 டன்னில் இருந்து, 290 டன்னாக அதிகரித்திருக்கிறது. இனி, குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காமல், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், திறந்தவெளியில் கொட்டினால், மாநகராட்சியில் இருந்து வீடு தேடி நோட்டீஸ் வரும். அதை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இதற்காக மாநகராட்சி சார்பில் சொந்தமாக 'சிசிடிவி' கேமரா கொள்முதல் செய்து, திறந்தவெளியில் கொட்டும் இடங்களில் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...