பன்னிமடையில் திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் கைது - வீடியோ வெளியீடு

பீரோவில் இருந்த 10 கிராம் நகை மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய பணிப்பெண் பாரதியை கையும் களவுமாக பிடித்து வீட்டின் உரிமையாளர்கள் தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர்.


கோவை: கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர்.



இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் பாரதி வெளியில் செல்வது போல் புறப்பட்டு படுக்கை அறையில் பீரோவின் எதிரே உள்ள மேல் சிளாபில்(கபோர்டு) ஏறி நகையை மறைந்து இருந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை, மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர்கள் பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர்.

தற்போது பணிப்பெண் பாரதி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...