கோவை அரசு மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையிலெயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...