வீட்டு வாடகையை அரசே ஏற்க வேண்டும் என கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இலவச பட்டா வீடற்ற மக்களுக்கு கிடைக்கும் வரையில் வீட்டு வாடகையை அரசே ஏற்க வேண்டும், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர், அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் இன்று (மார்ச்.11) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வீட்டு வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.



மேலும் வீடற்ற ஏழைகளுக்கும், எஸ்சி மக்களுக்கும் இலவச பட்டா வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி உடனடியாக வீட்டு வாடகை குறைக்க வேண்டும், இலவச பட்டா வீடற்ற மக்களுக்கு கிடைக்கும் வரையில் வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும், கொடுத்த மனுக்களை விசாரணை செய்து இலவச பட்டா வழங்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க தனிச்சட்டம் வேண்டும், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும், மாநில அரசின் நிதியை முழுவதும் மத்திய அரசு மாநில அரசிற்கே வழங்க வேண்டும், வாடகை வீடுகளின் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இச்சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...