கோவை கோர்ட்டுக்குள் போலி வக்கீல்கள் நுழைவதை தடுக்க க்யூ.ஆர். ஸ்டிக்கர்

கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்துவதால் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (மார்ச்.14) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா,கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வழக்கறிஞர்களின் சுய விவரங்கள் தெரிந்து விடும்.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும், இதனால் வழக்கறிஞர்கள் அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதனை தடுப்பதற்கு காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள் அவர்களின் வாகனங்களை நீதிமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நீதிமன்றத்தை சுற்றியோ வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொண்டு நிறுத்தி விட முடியாது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...