கோவையில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை: வரும் 19ஆம் தேதிதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ள நிலையில், 100% வாக்குப் பதிவினை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (மார்ச்.25) துவக்கி வைத்தார்.



செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

இந்த விழிப்புணர்வு வாகனமானது நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...