உக்கடத்தில் உள்ள அதிஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பரப்புரை தொடக்கம்

தங்க நகை தொழில் வாழ்வாதாரமாக இருக்கின்ற கோவையை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க மத்திய அரசிடம் பேசி அதற்கான முயற்சிகளை எடுப்போம் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி அளித்தார்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் உள்ள அதிஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அதே பகுதியில் வைத்து தனது இன்றைய பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், சரித்திரத்தில் பதிவு செய்யக் கூடிய வெற்றி இந்த கோவை தெற்கு தொகுதியில் கடந்த தேர்தலில் கிடைத்ததாகவும், அதே போன்ற வெற்றியை கோவை மக்களவை தொகுதியில் கேட்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். இந்த பகுதி நகை சம்மந்தப்பட்ட தொழில் மிகுந்த பகுதி எனவும், நகையை பொறுத்த வரை இந்த பகுதியை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்வோம் என்றும் கூறியதுடன், மற்றவர்களை போல இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்லாமல், செய்த பணிகளை சொல்லி இன்னும் அதிகமாக பணிகளை செய்ய தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



கோவை தெற்கு தொகுதியில் 80 லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறிய அண்ணாமலை, ஓரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கின்றோம், தங்க நகை தொழில் வாழ்வாதாரமாக இருக்கின்ற கோவையை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க மத்திய அரசிடம் பேசி அதற்கான முயற்சிகளை எடுப்போம் எனவும் உறுதி அளித்தார்.



அதற்கு பின்பு பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நம்முடைய தொகுதி இந்தியாவிலேயே கவர்ச்சிக்கு மயங்காத தொகுதி. பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களுடைய வாக்கு என்பதும், கோவையின் உடைய வளர்ச்சிக்கான வாக்கு என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கக் கூடிய தொகுதி நம்முடையது. தாமரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு, நாம் அத்தனை பேரும் கடுமையாக உழைக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் என்பவர் கோவையின் உடைய வருங்கால வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொடுத்து உள்ளார். மூன்றாவது முறையாக பதவியேற்கின்ற பொழுது நம்முடைய ஊரின் உடைய பிரதிநிதியாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர் பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கக்க வேண்டும்.



மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் கோயமுத்தூர் என்றால் அது அண்ணாமலைக்கு என்றும், அவர்களுடைய வாக்கு அண்ணாமலைக்கு என தீர்மானமாக இருக்கிறார்கள். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை நடக்க இருப்பது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல, நடக்க இருப்பது உள்ளாட்சிக்கான தேர்தல் அல்ல, ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் அத்தனை பேரும் மட்டுமல்ல , நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் குடும்பத்தினர், உறவினர்கள் அத்தனை பேரையும் அழைத்துச் சென்று நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை சின்னம்.

வாக்கு பெட்டியில் நமக்கு எந்த எண்! இப்பவே பாருங்க! நாம ஒன்னாம் நம்பர் இடத்துல இருக்கிறோம். இந்த ஒன்னாம் நம்பர் இடத்தை நாம் ஜூன் நான்காம் தேதி வெற்றி பெறுகின்ற பொழுது அதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வோம் ஒவ்வொரு நபர் இடமும் செல்வோம் பத்தாண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்துகின்ற பிரதமர் மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கோவையில் இருந்து நம் அன்பு சகோதரர் அண்ணாமலை தேர்ந்தெடுப்போம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.



கோவை பா.ஜ.க வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்து அண்ணாமலை வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட அய்யா சாமி கோயில் வீதி மற்றும் வைசியாள் வீதி பகுதியில் அண்ணாமலையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இப்பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுதம், இதம், மோடியின் மகள் போன்ற திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் மிக உற்சாகமாக அவர்களை வரவேற்று அண்ணாமலைக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். 

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...