கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிலேயே இருந்து வாக்களிக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


கோவை: 2024 பாராளுமன்ற தேர்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், இல்லத்திற்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த 20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 2570 மூத்த குடிமக்கள் வாக்காளர்களும், 424 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். இதே போன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 2085 மூத்த குடிமக்களும் மற்றும் 567 மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க உள்ளனர்.

ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க Poll Officer தலைமையின் கீழ் Micro Observer அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், கோவை (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு 14 குழுக்களும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு 21 குழுக்களும், வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் இன்று ஏப்ரல்.5 வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் (06.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம்.

படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச் சாவடிக்கு நேரில் சென்றுவாக்களிக்க இயலாது. எனவே தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என கோவை மாவட்ட நிர்வாகம் இன்று ஏப்ரல்.5 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...