காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மனுக்கு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவையை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம்.



இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆண்டுக்காண்டு அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பும் அதிகரித்திக் கொண்டே வருகிறது.

ஆனால் இந்தாண்டு தேர்தல் காரணமாக லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும்.சென்ற ஆண்டு ஆறு கோடி ரூபாய் பணமும், வைரம், தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...