ஜி.எஸ்.டி. வரியால் கோவையில் தொழில் நலிவடைந்து உள்ளது - ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம்

குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்திற்கு 29 பைசா என்ற அளவில்தான் நிதி வழங்குகிறார்கள். தாய் மொழி தமிழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று நடிகர் கருணாஸ் பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நேற்று (ஏப்ரல்.15) ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் மக்களிடம் இருந்து வருமான வரியை வசூல் செய்யும் பாஜக அரசு சென்னை, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி தர மறுக்கிறது.

குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்திற்கு 29 பைசா என்ற அளவில்தான் நிதி வழங்குகிறார்கள்.

தாய் மொழி தமிழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். கோவை தொகுதியில் உதய‌சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும்.



அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர்‌. சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கோவை ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நலிவடைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். வருங்கால சந்ததிகளை காப்பாற்ற பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...