கோவை கலெக்டர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பொதுமக்கள் பணத்தை மட்டுமே பிடிப்பதாகவும், கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில்லை எனவும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில், அனைத்து கட்சிகளும் வாக்காளர்கள் ஓட்டு செலுத்த பணம் கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவியது.



இது தொடர்பாக நேற்று (ஏப்ரல்.15) கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம்மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கோரி மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாவட்ட தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பொதுமக்கள் பணத்தை மட்டுமே பிடிப்பதாகவும், ஆனால் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் புகார் தெரிவித்தார். எனவே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கூறி இன்று ஏப்ரல்.16 போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...