கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக ஆட்சியரிடம் பாஜகவினர் புகார்

148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவர்கள் அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் அந்த பூத் களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கூறினர்.

இது குறித்து பேசிய ரவிகுமார், பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வெற்றியை பறிக்க முயற்சிப்பதாகவும், இந்த தேர்தல் முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும், பல்வேறு வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதால் பலரும் வாக்களிக்க இயலாமல் சென்றாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...