உக்கடம் புல்லுக்காடு பழ மண்டிக்கு மாங்காய் வரத்து குறைவு - விலை அதிகரிப்பால் வியபாரிகள் கவலை

கடந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் தற்போது மாங்காய் வரத்து குறைந்தளவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது என்றும், மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து குறைவாக வருவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தினால் மாங்காய் வரத்து குறைந்து மார்கெட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.



மேலும் வரத்து குறைவால் மாங்காயின் விலை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக கோவை வியாபாரிகள் தெரிவித்தனர்.



தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் மாங்காய் வந்து கொண்டு இருப்பதாகவும், தருமபுரியில் மாங்காய்கள் வர தொடங்கியுள்ளது என்றும், இன்னும் 3 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்று கூறினார். கடந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் மாங்காய் வரத்து குறைந்தளவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று வியபாரிகள் கூறினார். மேலும் தற்போது மார்கெட்டில் மொத்தமாக 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக பழ மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...