செல்வபுரத்தில் கொலை செய்யும் திட்டத்துடன் சென்ற 4 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்த 4 பேரையும் செல்வபுரம் போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று மே.3 செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த சதீஷ் (45) சொக்கம்புதூர் ரோடு, கிருஷ்ணா நகரை சேர்ந்த சசிகுமார் (34), சுண்டக்கா முத்தூர்சிவக்குமார் (34) பி. என்.புதூர், கோகுலம் காலனி வெங்கடேஷ் (52) என்பது தெரியவந்தது.

இவர்கள் வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...