மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு, இன்று (மே.16) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.



பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர், மாநில பிரதிநிதிகள் A.சாதிக் அலி, A.K.சுல்தான் அமீர், கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன், மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக துணை செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், மமக துணை செயலாளர்கள் S.S.அபு, ஆஷிக் அகமது, மருத்துவர் அணி செயலாளர் சபீர் அலி, பொருளாளர் ஜியாஉல்ஹக், மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...