கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீச்சட்டி ஏந்தி கம்பம் சுற்றி ஆடினார்.
Coimbatore: கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல்திருவிழா துவங்கி முடியும் வரை ஒவ்வொரு நாளும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வும் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் மே.16 நடைபெற்ற கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தி கம்பத்தை சுற்றி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார். இதனை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.