கோவையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் திணறல்

கோவையில் நேற்று கனமழையால் உக்கடம், மற்றும் சுங்கம் பைபாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.


கோவை: கோவையில் நேற்று (மே.18) 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் நீர் தேங்கியது. இந்த நிலையில் மழை ஓய்ந்த சற்று நேரத்தில் கோவை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.



குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.



இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...