கோவை 27வது வார்டு பீளமேடு கமலா ஜின் வீதியில் சாக்கடை அடைப்பு நீர் தேங்கி நின்றது, தூய்மை பணியாளர்கள் உடனடியாக அதை சரி செய்தனர்.
கோவை: கோவை 27வது வார்டு பீளமேடு கமலா ஜின் வீதி பகுதியில் நேற்று (மே.18) பெய்த மழையால் சாக்கடை நீர் முழுவதும் சாலையில் தேங்கி நின்றது. உடனடியாக ஏர் கம்ப்ரசர் லாரி மூலம் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது.
உடன் கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி ஆணையாளர் செல்வ சுரபி, கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்ட் சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.