ராணுவ குடியிருப்பில் சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை - கோவை காவல் ஆணையர் உறுதி

ராணுவ குடியிருப்பில் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி கங்கா மருத்துவமனை மற்றும் Young Indians உடன் கோவை மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய், சர்க்கரை நோய் பாத பராமரிப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவை பி.ஆர்.எஸ் மைதானம் வளாகத்தில் நடைபெற்றது வருகிறது.



கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணன், ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, கோவை சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்த குறித்து கேள்விக்கு, முதலில் சிஆர்டிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில் 304-A வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் மீதும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இது குறித்து தற்பொழுது புலன் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி, மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளதாகவும், அது சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கோவையில் மாநகர் பகுதியில் U-Turn-னால் போக்குவரத்து நெரிசல் சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் கருதுகிறார்கள். U-Turnனால் முதலில் இருந்ததை விட தற்பொழுது போக்குவரத்து நேரம் பொதுமக்களுக்கு குறைவாக உள்ளது. ஒரு சில தவறுகளை விரைவில் சரி செய்வதாக கூறினார். கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு உரிய உடை வழங்கப்பட்டதாகவும், முக கவசங்களை ஒரு சில காவலர்கள் சரிவர அணியாமல் இருக்கின்றனர். மேலும் காவலர்களுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக அழுத்தங்களை போக்குவதற்காக இதுபோல மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...