சூலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர முயன்ற மூவர் கைது, ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை.
கோவை: சூலூர் போட் ஹவுஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு இன்று மே.31 ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சூலூர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவம் இடமான சூலூர் போட் ஹவுஸ் அருகே வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெலாராம் (26), நாக ராம் (24), மற்றும் செட்டிபாளையம் பகுதியில் சேர்ந்த மணிகண்ட பூபதி (39) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.