தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5- பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் சந்தேகப்படும்படி கைப்பையுடன் சுற்றித்திரிந்த நபரை சோதனை செய்ததில் கைப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நலமானார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சுஜித் குமாரின் நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார் மதுபாலன் (எ) வடிவேல் (27) கார்த்திக் (30) மோகன்தாஸ் (37) அருண்குமார் (28) என மொத்தம் 5- பேரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.