நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் அளிக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண். 3, நாள்: 21.05.2024 மற்றும் எண்.5 நாள்: 31.05.2024 ஆகியவற்றின்படி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

83 நீர் நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண் 1 வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்நேர்வில், விவசாயிகளின் நலன் கருதி மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...