நஞ்சுண்டாபுரம் செங்கல் சூளையில் பிடிக்கப்பட்ட 10 அடி பைத்தான் மலைப்பாம்பு

நஞ்சுண்டாபுரம் செங்கல் சூளைக்கு அருகே 10 அடி பைத்தான் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு, மாங்கரை வனப்பகுதியில் விடப்பட்டது.


கோவை: கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செங்கல் சூளைக்கு அருகே, பத்து அடி மதிக்கத்தக்க மலைப்பாம்பு ஒன்று வந்திருக்கிறது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்தவுடன் பயந்திருக்கின்றனர். பைத்தான் மலை பாம்பு அந்தப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சுருண்டு கொண்டது. உடனடியாக வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அலைபேசியில் தகவல் தந்தனர்.

இந்த நிலையிலே வனத்துறை வன பணியாளர்களும், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான விக்னேஷ் குமாரும் நஞ்சுண்டாபுரம் இடத்திற்கு சென்றனர். அப்பொழுது அங்கிருந்த மலைப்பாம்புவை வனத்துறையுடன் இணைந்து, பாம்பு பிடி உபகரணங்கள் உதவியுடன், பாம்பு பிடி வீரர் விக்னேஷ் குமார் மீட்டு பைக்குள் அடைத்தார். அடைக்கப்பட்ட பாம்பு பின்னர் மாங்கரை வனப்பகுதியில் விடுவிக்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில், புதர் மண்டி கிடக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாக இருக்கின்றது.

தற்பொழுது கோடை மழை பொழிந்த நிலையில், பல்வேறு இடங்களிலும் புதர்கள் காணப்படுகின்றன. இனி வரக்கூடிய காலங்களிலும் மழை அதிக அளவில் பொழியும் என்பதனால், செடிகள் புதர்கள் வளர ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலே, புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடும் என்பதனால், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் உயிரியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். பொதுவாக மலைப்பாம்பு வனத்தில் இருக்கும் நிலையில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வளவு எளிதாக பொதுமக்களுக்கு தென்படாது.

ஆனால் செங்கல் சூளை அருகே பைதான் மலை பாம்பு வந்தது அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தினாலும், அதனை லாபகமாக பிடித்து வனத்தில் விடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...