தாராபுரம் அருகே கிராம சாலைப்பகுதியில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கவுண்டச்சி புதூர் ஊராட்சி எல்லைப்பகுதியில், சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கவுண்டச்சி புதூர் ஊராட்சி. இதன் எல்லைப் பகுதியில் உடுமலை செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தபொதுமக்களில் சிலரும், தாராபுரம் நகராட்சி பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சி கடைகள் வைத்திருக்கும் பலரும் இரவோடு, இரவாக அதன் கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில்குப்பைகளால் சுப்பிரமணியபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலையில் சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்படும் இடம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், கவுண்டச்சி ஊராட்சி செயலாளர் நாகராஜ், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

குப்பைகளை பத்து நாட்களுக்குள் அகற்றாவிட்டால், வரும் 23ம் தேதி தாராபுரம் உடுமலை சாலையில் தண்ணீர் பந்தல் அருகே சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். பொதுமக்களை சமாதானப்படுத்திய தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நிரந்தரமாக அகற்றி ஒரே இடத்தில் சேமிக்க தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குப்பை கிடங்கு அமைத்து இனிவரும் காலங்களில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நபர்களை கையும் களவுமாக பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...