குவைத் தீ விபத்து: உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று கொண்டு வரப்படும் - அயலகத் தமிழர் நல வாரியம்

குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் நேற்று தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 50க்கும் மேற்பட்டோரில், 7 தமிழர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் இன்று கொண்டு வரப்படவுள்ளது.


கோவை: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மீட்கப்பட்ட நபர்கள், குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெரும்பாலானோர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.

விபத்தில், உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு முதல்வர் உத்தரவு பிறப்பிததுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், விபத்தில் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள்- +91 1800 309 3793, +9180 6900 9900, +91 80 6900 9901.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...