கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிலென்ஸ் கண்ணாடி

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்ப, நுழைவு வாயில் அருகே 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வாறு புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் வெளியே வரும்போது அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் வெளியே வரும்போது வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் வருவது தெரியவில்லை.



இதனால் அண்மையில் அங்கு விபத்தை தவிர்க்கவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்பவும் நுழைவு வாயில் அருகே பட்டன் மூலம் இயக்கப்படும் 2 கேட், 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...