கோவையில் நேர கணக்கீடு தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு

நேர கணக்கீடு தொடர்பான பிரச்சனையில் தனியார் பேருந்தையும், அரசுப்பேருந்தையும் சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகளுக்கும், அரசு பேருந்துகளுக்கும் இடையே நேர கணக்கீடு தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த கிணத்துக்கடவு-காந்திபுரம் செல்லும் 33 எண் கொண்ட அரசு பேருந்தின் ஓட்டுனருக்கும் 1C என்ற தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கும் இடையே நேர கணக்கீடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.



இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்தை சாலையில் நடுவழியிலேயே நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அது கைகலப்பு ஆகும் நிலைக்கு சென்றது. பின்னர் அங்கிருந்தவர்கள் மற்றும் பயணிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து பேருந்துகளை அவர்கள் எடுத்துச்சென்றனர்.

இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை நகருக்குள் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதை ஆகி வரும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்பட்டு இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...