தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

தரவரிசை பட்டியலில் திவ்யா, சர்மிளா, மயூரன், நவீனா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஜூன்.19 வெளியிடப்பட்டது. 4 பேர் 200 - க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பிரிவில் வேளாண்மை, தோட்டக் கலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் உள்ளன.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டன. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12 - ம் தேதி வரை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வில் துணைவேந்தர் கீதாலட்சுமி பங்கேற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.



தொடர்ந்து அவர் கூறும்போது, நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக 33 ஆயிரத்து 973 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 29 ஆயிரத்து 969 விண்ணப்பங்கள் தரவரிசை பட்டியலுக்கு ஏற்கப்பட்டன. அது தவிர முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவில் 234 பேர், அரசு பள்ளியில் படித்தவருக்கான பிரிவில் 10,053 பேர், விளையாட்டுப் பிரிவில் 701 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 84 பேர், தொழிற் கல்வி பிரிவில் 1,900 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. தரவரிசை பட்டியலில் திவ்யா, சர்மிளா, மயூரன், நவீனா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளனர் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...