கோவையின் அனைத்து மண்டலங்களிலும் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்

வரும் 2 மாதங்களில் 567 OSR நிலங்கள் கோவை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டில் 25 OSR நிலங்களை பூங்காக்களாக மாற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கோவை மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பெரிய பூங்கா OSR நிலம் இருந்த இடத்தில் உருவாக்கிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019ன் படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது அதில் 10% நிலத்தினை திறந்த வெளி நிலமாக (Open Space Reservation Land) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10%திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் OSR நிலங்களில் அரசு பிற்காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான பூங்கா, விளையாட்டு திடல் போன்றவற்றை உருவாக்கும்.

கோவை மாநகரில் இதுவரை 2232 OSR நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது சுமார் 550 ஏக்கர் நிலம்) இதன் மதிப்பு ரூ.16,000 கோடி இருக்கும். இவற்றில் மொத்தம் 1137 OSR நிலங்களை கோவை மாநகராட்சியின் பெயருக்கு வருவாய் துறை மாற்றிக்கொடுத்துள்ளது. OSR நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த இடங்களில் சுமார் 50% பூங்காவாக/விளையாட்டு மைதானமாக பொது பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த 3 ஆண்டுகளில் 400-க்கும் அதிகமான OSR நிலங்களில் வேலிகள் அமைக்கப்பட்டு, அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வரும் 2 மாதங்களில் 567 OSR நிலங்கள் கோவை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டில் 25 OSR நிலங்களை பூங்காக்களாக மாற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கோவை மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பெரிய பூங்கா OSR நிலம் இருந்த இடத்தில் உருவாக்கிட திட்டமிட்டுள்ளது.



இங்கு மரங்கள் நடுவதால் மாநகருக்குள் சுத்தமான காற்று அதிகம் வரும் என இயற்கை ஆர்வலர்கள் நம்புகின்றனர். இங்கு பூங்காக்கள் அமைக்க மாநில அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது மொத்தப் பரப்பில் 10 %திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும் என்ற மாற்று வழிமுறை இருப்பதால், பலரும் நிலத்தை தருவதை விட வழிகாட்டுதல் விலையை தந்துவிட்டு நிலத்தை தக்கவைக்கின்றனர்.

நிலத்தின் சந்தை விலையை (MarketValue) வழிகாட்டுதல் விலை (Guideline Value) குறைவு என்பதால் இம்மாதிரியான நடவடிக்கையை பலரும் பின்பற்றுகின்றனர். இதனால் கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே நகருக்குள் இருக்கும் சூழல் வருவதால், அரசு விதிமுறையை மாற்றம் செய்ய வேண்டும் என தற்போது சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...