பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கனமழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு வேலிகள் சேதமடைந்தன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


கோவை: கடந்த இரண்டு நாட்களாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட், சண்முகா எஸ்டேட், அட்டகட்டி போன்ற பகுதிகளில் அதிக அளவில் கன மழை பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தடுப்பு வேலிகள் சேதமடைந்தன.



இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவிக்கு செல்ல தற்போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து குறைந்து தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்டவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...