உடுமலையில் நகர மன்ற கூட்டம்: குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம்

உடுமலை நகர மன்ற கூட்டத்தில் குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம் நடைபெற்றது. 75 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் பேசும் பொழுது, உடுமலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் குப்பைகள் அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். அலட்சியம் காட்டும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், 25 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், உடுமலை தளி ரோட்டில் மத்திய கூட்டுறவு வங்கி அர்பன் பேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவற்றை இடமாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும், தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கும் கோரிக்கைகளை உடனே சரிசெய்ய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உட்பட சுமார் 75 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...