கோவையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த மனைவி: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவையில் மருத்துவ அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கில், கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக மின் வாரிய உதவிப் பொறியாளர் சாய் பிரேமனின் (45) மனைவி ராஜலட்சுமி (43), 2018 ஜனவரி 8-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

உடற்கூராய்வின் போது, ராஜலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாக கூறி, சாய் பிரேமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவர்கள் அருண்குமார், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தர் ஆகியோர் சேர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜூலை 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...