கோவை கணபதியில் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

கோவை கணபதி பி அண்ட் டி காலனியில் வீட்டின் கதவை உடைத்து 2½ பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கோவை கணபதி பி அண்ட் டி காலனியில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி பி அண்ட் டி காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (55). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். ஜூலை 12 அன்று காலை ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார்.

மதியம் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, திருடர்களை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...