வால்பாறையில் மண் சரிவு: நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவிப்பு

வால்பாறையில் கனமழை காரணமாக 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் மண் சரிந்து மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையின் மேற்பகுதியில் இருந்து மண் சரிந்து மரம் விழுந்தது. இதனால் சாலையில் மண் குவியல்களாக விழுந்து இருந்தது. காலை 4:30 மணி அளவில் வால்பாறைக்கு வந்த பேருந்து ஓட்டுநர் இதனைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.



இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் நின்றன. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு சிக்கித் தவித்தன. காலை 7 மணி அளவில் தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், வால்பாறை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...