கோவை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது

கோவை கரடிமடை அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ராமசாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் இந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் கரடிமடை அருகே உள்ள வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுப் பன்றி மற்றும் முயல் வேட்டைக்காக வைக்கப்படும் 'அவுட்க்காய்' எனப்படும் நாட்டு வெடியால் கால்நடைகள், யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பலத்த காயமடைவதுடன், சில சமயங்களில் உயிரிழப்பதும் உண்டு. இதனைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



மதுக்கரை வனச்சரகம் உட்பட்ட கரடிமடை பிரிவு பூலுவபட்டி கிராமம் அடுத்த வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்ற கருஞ்சி என்பவர் வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டு வெடி குண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

பூலுவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோமதியின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் ராமசாமியின் வீட்டில் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வெடி பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...