அமராவதி அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து: லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 88 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.



குறிப்பாக, தமிழக-கேரள எல்லை பகுதியான மறையூரில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதன் விளைவாக, அமராவதி அணைக்கு தற்போது 7,000 கன அடி நீர்வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக இரண்டாவது நாளாக 1,500 கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



தற்போது, அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியில், நீர்மட்டம் 88 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...