கோவையில் நவம்பரில் நடைபெறவுள்ள உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக்

கோவையில் நவம்பர் 20 முதல் 30 வரை உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.


கோவை: ஐ.எச்.ஸ் (Indigenous Horse Society) - தமிழ் நாடு அமைப்பின் சார்பில் கோவையில், வரும் நவம்பர் மாதத்தில் உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியிட்டு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (20.07.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐ.எச்.ஸ் - தமிழ் நாடு மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், 'எக்ஸ்போ வெண்' குழுமத்தின் தலைவர் மஹேந்திரன், நடிகர் பிரசாந்த், SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எமரால்டு குழுமத்தின் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஐ.எச்.ஸ் அமைப்பின் தென் இந்திய கன்வீனர் நவநீத் ராஜ் மற்றும் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் கலந்து கொண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த 2 போட்டிகளுக்கான லோகோவை வெளியிட்டனர்.

இந்த போட்டிகள் வரும் நவம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ளது.

உலகில் முதல் முறையாக IPL/TNPL போல இந்த போலோ பிரிமியர் லீக் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை முன்னிறுத்தி, Kovai Canter Kings(கோவை), Salem Saddle Soldiers (சேலம்), Madurai Mallet Magicians (மதுரை), Horseplay Soldiers Nellai(நெல்லை), Trichy Turf Torpedoes (திருச்சி), Chennai Champions (சென்னை) என மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.



குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளனர். இது ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. மேலும், இந்த 2 நிகழ்வுகளும் சர்வதேச தரத்தில் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளை மதிப்பீடு செய்ய நிபுணத்துவம் மிக்க நடுவர் குழு அமைக்கப்படும் என்றும் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் பரிசு தொகை உண்டு என்றும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் காண்பதோடு, பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களிலும், OTT தளங்களிலும், ரேடியோ மூலமாகவும் பார்க்க, கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...