நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமனம்

கோயம்புத்தூர்: நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.


Coimbatore: நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ், தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய நியமனத்தை இந்தியா மற்றும் மொரிஷியஸ் அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த கவுரவமிக்க பதவிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய பொருளாதார வணிக நிறுவனம், இந்தியா ஆப்பிரிக்கா வணிக கவுன்சில் ஆகியவை பரிந்துரை செய்தன. இந்த பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

ரஷ்யாவுக்கான மொரிஷியஸ் தூதுவர் பேராசிரியர் டாக்டர் கேஷ்வர் ஜன்கி, அதிகாரப்பூர்வ நியமன கடிதத்தை வழங்கினார். நியமன விழாவில் முன்னாள் அமைச்சர் முகேஷ்வர் சோனி கோஸ்க், இந்திய பொருளாதார வர்த்தக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால், நேரு கல்விக் குழுவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி. கிருஷ்ணக்குமார், ஹரிநாராயணன் சுவாமிகள், நேரு கல்வி குழுமங்களின் உலகளாவிய மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ்குமார், ஊடக பிரிவு தலைவர் ரோஷன் மாத்யூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மொரிஷியஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவுல பிரிவு, கல்வித்துறை அமைச்சர் லீலா தேவி தகூன் இந்த நியமனத்தை அங்கீகரித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில், எஸ்எம்இ தொழில் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைச்சர் நவீனா ராம்யாத் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, மொரிஷியஸ் குளோபல் எஜூகேஷன் அவுட்ரீச் நிறுவனர் ஜெயசங்கர் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எஜூகேஷன் 4.0 திட்டத்தின்படி, கல்வியில் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

மொரிஷியஸ் இந்திய (தென் இந்தியா) கவுரவ வர்த்தக ஆணையராக, டாக்டர் பி கிருஷ்ணதாஸ் இந்தியா-மொரிஷியஸ் வணிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் பணியாற்றுவார். பொருளாதார இணைப்புகள், வணிக பரிமாற்றங்கள், இருதரப்பு வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் முதலீட்டு திட்டங்களில் புதிய வாய்ப்புகளை ஆராய்வார்.

கண்காட்சிகள், வணிக தொடர்பு கூட்டங்கள், பொருள் மற்றும் சேவை சந்தைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மேம்பாட்டையும் மேற்பார்வையிடுவார். இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி, சந்தை நிலவரம் போன்றவற்றிலும் பங்களிப்பார். இருதரப்பு மக்கள் தொடர்புகள், வணிக வாய்ப்புகள், வணிகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்.

டாக்டர் பி கிருஷ்ணதாஸ் 2009 ஆம் ஆண்டு முதல் நேரு குழுமங்களின் நிர்வாக அறங்காவலராகவும், தலைவராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 22 கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் இந்த குழுமம், ஆண்டுதோறும் 20,000 மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறது. இவரது சிறப்பான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு விருதுகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக ஆணையராக, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தக திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியா-மொரிஷியஸ் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...