ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

கோவையில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை நகரத்தில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விவரம் வருமாறு:

சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திராகாந்தி. இவரது உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா. இவர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து உள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக கொடுத்து உள்ளனர்.

ஆனால், இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் அண்மையில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் நேற்று ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரும் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. ரஞ்சனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான கவிப்பிரியா, தான் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...