தாராபுரம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் அடுத்த சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள சேடபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை சமையல் கூடம் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், வார்டு பிரதிநிதி ரமேஷ், ராமகிருஷ்ணன், இளைஞர் அணி கனகசபாபதி, விஸ்வநாதன், கோகுலகிருஷ்ணன், கார்த்திக், செல்வகுமார் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...