அருந்ததியர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வரவேற்பு

கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை பிரஸ் கிளப்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்து, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பட்டியல் பிரிவிற்குள் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பட்டியல் பிரிவுக்கு உள்ளாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.



"திமுகவிற்கும், உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "இந்த சட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞருக்கும் இந்த சட்டம் செல்லும் என்ற நிலைக்கு வருவதற்கு உடன் இருந்த Makkaludan Mudhalvar ஸ்டாலினுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் கூறினார்.

நாளை காலை தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். அதேசமயம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...