ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் 504 தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை வழங்கி, மீட்பு குழுவினருக்கு சான்றிதழ்கள் அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட 504 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்கள் வசம் ஒப்படைத்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "2022 ஆம் ஆண்டிலிருந்து தொலைந்த செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை சுமார் 2300 தொலைந்து போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "இந்த வருடம் இதுவரை பதிவாகியுள்ள 1100 சிஎஸ்ஆர்-களில் 504 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

சைபர் குற்றங்கள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் இதுவரை 84 எஃப்ஐஆர்-கள் பதியப்பட்டுள்ளன. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்கள் நிதி சார்ந்தவை. மக்கள் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



கஞ்சா வழக்குகள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 13 நபர்கள் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரும் நபர்களை கண்காணித்து இதுவரை 10 குழுவினரை முடக்கியுள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். சிறையில் இருக்கும்போதே அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

போக்சோ வழக்குகள் குறித்தும் அவர் பேசினார். "கடந்த ஜூன் 30 வரை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்து வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். 'Project பள்ளிக்கூடம்' மூலம் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில் மட்டும் 'Project பள்ளிக்கூடம்' மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...