தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் - 2024 ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில் மாணவர் நல மையத்தின் சார்பாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது.



மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர். நா. மரகதம் வரவேற்புரை வழங்கினார். அவர் தனது உரையில், கலந்து கொண்ட நிறுவனங்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாராட்டினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் அறிவியல் கல்வியில் முன்னோடியாக திகழ்வதோடு தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான திறன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர். இரா.தமிழ்வேந்தன் துவக்க உரையாற்றினார். வேலைவாய்ப்பு முகாம் 2024-ஐ வெற்றிகரமாக நடத்த உதவிய நிறுவனங்களைப் பாராட்டிய அவர், கலந்து கொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் அறிவு மற்றும் கற்றல் திறன் அடிப்படையில் பொருத்தமான வேலையைப் பெற ஊக்குவித்தார். இவ்வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனம், சேவைத் துறை, வங்கி, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற உதவுவதாக அவர் கூறினார்.

மேனாள் பேராசிரியர் முனைவர் ஜ.வெங்கிட் பிரபு இந்த வேலைவாய்ப்பு முகாமின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்களுக்கு விண்ணப்பம் தயாரித்தல், பொதுவிவாதம், நேர்காணல் போன்றவற்றிற்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

உதவி வேலைவாய்ப்பு ஆலோசகர் முனைவர். ச.கவிதா நன்றியுரை வழங்கினார். இந்த முகாமிற்கு உதவிய பேராசிரியர்கள் முனைவர்.மு.முத்துலட்சுமி, முனைவர்.கு.ம.செல்லமுத்து, முனைவர்.கி.தங்கராஜ் மற்றும் முனைவர்.சி.பிரதிபா ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முகாமில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் நோக்கம், வேலையின் தன்மை, ஊதியம் போன்ற விவரங்களை படத்தொகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினர்.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...