சேரகுலவேளாளர் சமூகத்திற்கு சலுகைகள் வழங்க கோரிக்கை: தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75வது பேரவை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டும் சலுகைகள் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேரமான் பெருமாள் நாயனாரின் 94-வது குருபூஜை வழிபாட்டு விழா மற்றும் தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75 ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சேரகுல வேளாளர் சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேரகுல சமூக பெண்கள் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றினர். இந்த நிகழ்வை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



பேரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் N.S. மணி, "சேர குல வேளாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் மோகன் அவர்களின் பரிந்துரைப்படி இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இதனால் இந்த சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

சேரகுலவேளாளர் சமூகத்திற்கு உரிய சலுகைகள் வழங்கப்படாததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...