உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கிருஷ்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.



தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் மற்றும் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி மண்டபத்தில் நாராயணீயம் பாராயணமும் நடத்தப்பட்டது. பக்தர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த ராதை மற்றும் கிருஷ்ணன் கொலு பொம்மைகளை வைத்து திருக்கல்யாணம், சங்கு பால் வைபவம், வெண்ணை காப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.

பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கிருஷ்ணருடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கண்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...