தமிழ் புலிகள் கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கோரி திருப்பூரில் மனு

தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ் புலிகள் கட்சியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி களப்பணியாற்றி வருகிறார். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது."

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...