கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 29.08.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (29.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டலம் வார்டு எண்.78க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு 10வது வீதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும்,





வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண். 79க்குட்பட்ட எஸ்.ஏ.கார்டன் பகுதியில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார துணை மையத்தினையும்,





பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரைகளின் இருபுறங்களிலும் அளவீடு செய்து எல்லை கற்கள் நடும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



வார்டு எண்.89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் NDP வீதியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீடற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினையும்,



இராமசெட்டிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் மாநில நிதி ஆணைய திட்டத்தின்கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.92க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன்ஸ் வரை தடுப்பு சுவர் கட்டும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





வார்டு எண்.93க்குட்பட்ட ராம்நகர், இடையர்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும்,



வார்டு எண்.88க்குட்பட்ட தொண்டாமுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.98க்குட்பட்ட பொள்ளாச்சி மெயின் ரோடு, காந்திநகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் யோகா மையம் கட்டுமானப்பணியினையும் மற்றும் வார்டு எண்.99க்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ABC மையத்தினையும் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...