தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை: தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்திய பாராட்டு விழா

கோவை ராஜவீதியில் M.K தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விஸ்வகர்மா பேரவை தலைவர் பாண்டியன் தலைமையில் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் M.K தியாகராஜா பாகவதர் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவானது தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்தும் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

விழாவில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசளித்து பாராட்டி பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்கான பாடுபடும் சமுதாய தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன், தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும் அதனை கைவினையாளர்கள் நல வாரியம் என மாற்ற வேண்டும் எனவும் கூறினார். தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை எனவும், தமிழக அரசு அவற்றை முறையாக செயல்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார். தொழிலில் வறுமையில் இருப்பதால் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...