கோவையில் மாடு ஆட்டம், தெரு நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்

கோவை சுங்கம் சந்திப்பில் நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு மற்றும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாடு ஆட்டம், தெரு நாடகம் மூலம் கவனம் ஈர்த்தனர்.


Coimbatore: கோவை சுங்கம் சந்திப்பில் தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு சுற்றுக் காவல் (Road Safety Patrol) சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் "நல்ல சமாரிட்டன் திட்டம்" (Good Samaritan Scheme) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டார். 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



மாணவிகள் தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை மதித்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்தில் சிக்கியவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்தும் பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தெரு நாடகம் மற்றும் மாடு ஆட்டம் வாயிலாகவும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாடு முகமூடி அணிந்து கொண்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளை கண்டு அனைவரும் வியந்தனர்.



மாணவிகள் மத்தியில் பேசிய போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் இரவிச்சந்திரன், "ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக பயணித்தால் மட்டுமே சாலை பாதுகாப்பு என்பது வெற்றியடையும். விபத்தில்லா கோவையை உருவாக்க முடியும்" என்று கூறினார்.

இந்த புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், சாலை பாதுகாப்பு மற்றும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்த செய்தியை பொதுமக்களிடம் திறம்பட கொண்டு சேர்க்க மாணவிகள் முயற்சி செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...