அன்னூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அன்னூர் அருகே பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் பகுதியில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அம்மா செட்டி புதூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. அண்மையில் இங்கு இடம் வாங்கிய தொழிலதிபர் காஸ்டிங் அல்லது இரும்பு ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



ஆலைக்கு முன்னோட்டமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை அமைப்பதாக குற்றம்சாட்டி அம்மா செட்டி புதூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலம் காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையையும், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடும் நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் ஒருவர் லாப நோக்கில் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி கட்டுமான பணிகளை தடுக்கும் நோக்கில் கட்டுமானங்களுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சுற்றுச்சுவர் அமைக்க சட்டவிரோதமாக சுமார் 20 அடிக்கும் மேல் திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு போன்று குழிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் குழந்தைகள் வைத்திருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...